யாழில் தாலிக்கொடி மற்றும் பணம் என்பவற்றை திருடிய சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் நகை மற்றும் பணம் என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா பணம் என்பன திருடப்பட்டாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
கைது
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர்.
குறித்த நபர் திருடுவதற்கு தயாராகும் ஊரில் வாடகைக்கு ஒரு வீட்டினை எடுத்து தங்கி நின்று, தான் திருடவுள்ள வீட்டை முழுமையாக நோட்டமிட்ட பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களின் பின்னர் திருட்டில் ஈடுபட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
இது அவரது வழமையான செயற்பாடு என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
