உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் மெளனித்து போன முஸ்லிம் சமூகமும்

Investigation Arrest Muslium Srilanka Bomb Blast
By Independent Writer Oct 14, 2021 10:30 AM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இருபத்தொன்பது மாதங்கள் கடந்து விட்டன. இக்குண்டுத் தாக்குதலில் பெரும் உயிர்ப் பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவ சமூகத்திற்கு அப்பால் அதன் பின்னரான பல்வேறு தாக்குதல் வன்முறைகள் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளால் முஸ்லிம் சமூகம் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது.

தாக்குதல் நடைபெற்று ஒரு சில நாட்களுக்குள் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் பாதுகாப்பு தரப்பினரால் கொண்டு வரப்பட்ட போதும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தன.

பாதிப்பிற்குள்ளான கிறிஸ்தவ சமூகம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைதி பேண சிங்கள பௌத்த மத பேரினவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கினர்.

தீவிர தேரர்கள் உள்ளிட்ட பெளத்த மத தீவிரவாதம் இனவாத அரசியல் நடவடிக்கையாக மாற்றம் அடைந்தது.

இன்று வரை முஸ்லிம்கள் ஈஸ்டர் தாக்குதலின் பேரால் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது. முஸ்லிம் பிரதேசங்கள் பாதுகாப்பு தரப்பினரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன.

முஸ்லிம்கள் தங்கள் வீட்டுப் பாவனைக்கென பயன்படுத்தும் கத்தி, கோடாரி போன்ற உபகரணங்கள் கூட ஆயுதப் பொருட்களாகப் பார்க்கப்பட்டன.

சுற்றி வளைப்புகள், சந்தேகத்தின் பேரிலான கைதுகள், தாக்குதல் சம்பந்தமில்லாத பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டமை, அப்பாவிகளின் கைது, நீதிமன்ற விசாரணை இன்றி புனர்வாழ்வு உள்ளாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், புர்கா, நிகாப் தடை, உலமா சபையிடமிருந்து ஹலால் சான்றிதழ் பறிப்பு, பாரம்பரிய முஸ்லிம்கள், வஹ்ஹாபி முஸ்லிம்களைக் கூறு போட்டமை, கருத்தடை கொத்து ரொட்டி தொடக்கம் கருத்தடை ஆடைகள், வைத்தியர் ஷாபி எதிரான கருத்தடை பொய் பிரச்சாரம், அருள் மறை அல்குர்ஆனிற்கு எதிரான பிரச்சாரம் இறுதியில் அல்லாஹ்விற்கு எதிரான பிரச்சாரம் வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.

குருநாகல், நிக்கவரெட்டி, குளியாப்பிட்டி, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் அரங்கேற்றம், ஹார்கோட், நோலிமிட், மினுவாங்கொடை பஸ்டா தொழிற்சாலைகள் போன்ற பெரிய தொழிலகங்கள் மீது தீ வைக்கப்பட்டமை போதாமல் முஸ்லிம்களின் ஷரீயா சட்டத்தில் கைவைக்கும் நிலைக்கு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான பல அநியாயங்கள் தொடராக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஏன் முஸ்லிம் சமூகம் பேசாமல் மௌனமாக இருக்கிறது.

தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரிகளை அவர்களோடு தொடர்புடையவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதில் பரிபூரண ஒத்துழைப்பை முஸ்லிம் சமூகம் வழங்கியது.

இப்பங்களிப்பை அப்போதைய இராணுவத் தளபதி சிலாகித்துச் சொல்லியிருந்தார். தற்போது கிறிஸ்தவ சமூகத்தின் தலைவராகச் செயற்படும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமான சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதிலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதிலும் முனைப்பாகப் போராடி வருவதுடன் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தி வருகின்றார்.

சஹ்ரான் குடும்பமும் அவனது விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு நண்பர்களும் செய்த இந்த அராஜகத்திற்கு எப்படி முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பாக முடியும்? பேராயர் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு கடிதம் அனுப்பிய பின்பு 13 /ஜூலை /2021ல் ஊடக சந்திப்பை நடாத்தினார்.

அவ் ஊடக சந்திப்பில் அரசியல் சாயம் பூசப்படாதவர்களைக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறும் தாக்குதல் நடைபெற்று இருபத்தாறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், அதனைத் திட்டமிட்டவர்கள், இந்த கொடூர தாக்குதலைத் தவிர்க்க முடிந்திருந்தும் பொருட்படுத்தாது விட்டவர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயற்றிட்டம் மிகவும் மந்த கெதியில் நடைபெற்று வருகின்றது என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்ததுடன், மில்லியன் கணக்கில் செலவிட்டு நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரேரணைகள் ஏன் தாமதப்படுத்தப்படுகிறது எனக் கேள்வியும் எழுப்பினார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் நாற்பது பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறும் சிறை உள்ளவர்கள் மாத்திரம் தானா குற்றவாளிகள்? என்று வினா எழுப்பியதுடன் இந்த தாக்குதல் விடயத்தை முன்கூட்டி அறிந்தவர்கள், கடமைகளைத் தட்டிக் கழித்தவர்கள், பொறுப்புக் கூறலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகத் திரியும் அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், பொலிஸார் எனப் பலர் காணப்படும் போது சிறையில் உள்ள நாற்பது பேருக்கு மாத்திரம் சட்ட நடவடிக்கை எடுப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயற்பாடாகும்.

மேலும் அறிக்கை சில விடயங்களை ஆழமாக விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறது. தமக்கு உள் நாட்டில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாட வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார்.

ஓய்வு பெற்றுச் சென்ற முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெரும் சதியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.முன்னாள் சட்டமா அதிபரின் கூற்றை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த போது பின்வருமாறு கூறினார்.

"முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சாலே 2015 ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விடயங்களை முன் வைத்த போது அப்போதைய பிரதமர் ரணில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன் கூட்டிக் கிடைத்த தகவல்களை வழங்காமை தொடர்பில் அப்போதைய தேசிய உளவுப் பிரதானி சிசிர மென்டிஸ், தேசிய உளவுப் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாண்டோஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்" என்றார்.

பாதுகாப்புச் சபையின் முக்கிய கூட்டங்களுக்குத் தன்னை ஜனாதிபதி அழைக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் குற்றம் சாட்டினார்.

இந்திய புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமான புலனாய்வு தகவல்களை வழங்கி இருந்தும் மிகுந்த பொடுபோக்குடன் இருந்த அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் குண்டுத் தாக்குதல் நடைபெற காரணமாக இருந்து விட்டு பழியை ஏன் மட்டும் ஏன் முஸ்லிம் சமூகத்தின் மீது போட்டனர்?.

இதைச் சாட்டாக வைத்து ஏன் முஸ்லிம் சமூகத்தை வதைக்கின்றனர்?

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்காமல் ஆழ்ந்த மெளனத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது?

தேர்தல் மேடைகளில் வீராப்பு பேசும் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் மெளனமானார்கள்?

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம், அசாத் சாலி ஆகியோர் அவ்வப்போது குரல் கொடுத்தனர். முஸ்லிம்களின் சமயத் தலைமையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு உரிமை கோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏன் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது?

கடந்த மஹிந்த அரசாங்க காலத்தில் ஜெனீவா வரை சென்று வக்காலத்து வாங்கிய உலமா சபை இப்போது ஏன் பேசாமல் உள்ளது?

தேசிய சூரா சபை எங்கே? முஸ்லிம் கவுன்சிலப் ஸ்ரீலங்கா எங்கே?

பள்ளிவாயல்கள் சம்மேளனம் எங்கே? முஸ்லிம் சிவில் சமூக எங்கே?

நாம் செய்ய வேண்டியவை

# கிறிஸ்தவ சமூகத்துடன் உடன் இணைந்து செயற்படல். பேராயரின் கரத்தை வலுப்படுத்தல்.

இவ்விடயத்தில் அரசியல்வாதிகள், உலமாசபை, சூறா சபை, முஸ்லிம் கவுன்சிலப் ஸ்ரீலங்கா, பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒரு பொது வேலைத்திட்டத்திற்குள் உடன் வரல்

# உண்மையான நீதியான அரசியல் சாயமற்ற விசாரணையை உறுதிப்படுத்த உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளல்.

# உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறியத் தூண்டல்.

# ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகச் சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கு உண்மையான விளக்கம் அளித்தல்.

# இந்த தாக்குதலின் சதி தொடர்பில் இன்று நடுநிலையான சிங்கள ,தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களுடன் பொது வேலைத் திட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் செல்லல்.

# சர்வதேச அழுத்தங்களை இவ்விவகாரத்தில் அரசுக்குக் கொடுத்தல். இதற்கு இராஜதந்திர மட்டத்திலான உறவுகளைக் கட்டியெழுப்பல். முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்கள், முஸ்லிம் சர்வதேச அமைப்புகள், ஏனைய சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு இவ்விடயத்தைக் கொண்டு செல்லல்.

இவ்வேலைத்திட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையில் ஒரு குழுவாக இணைந்து மேற்சொன்ன அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இயங்குவார்களா? 

யூஎல்எம்என் முபீன்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US