நீதிமன்றத்தில் பொய் கூறும் சலே! நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்
அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பொய்க் கூறியதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சுரேஷ் சலே, வழக்கை திசை திருப்பும் வகையில் செயற்படுவதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சலே, விசாரணைகளுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும், தனது இலத்திரனியல் சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,