கொழும்பு மாநகர சபையில் பிரபா கணேசன் முடிவு
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் (Praba Ganesan) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் பம்பலப்பிட்டி (Bambalapitiya) தலைமை காரியாலயத்தில் இன்று (22) நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அநுர அரசுக்கு ஆதரவு
இதன் போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ஜனநாயக தேசிய கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப்பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும்.
மேலும் அரசாங்கம் மக்கள் விரோத செயல்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவினை மீளப்பெறவும் தயங்க மாட்டோம் என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
