20வது திருத்தச் சட்டம் உருவாக்கிய சுப்பர் மேன் நாட்டை அழித்தார்-லக்ஷ்மன் கிரியெல்ல
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுப்பர் மேனை உருவாக்கியதாகவும் அவர் இறுதியில் நாட்டை அழித்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிததுள்ளார்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தை நாங்கள் பார்க்கவில்லை
20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ப்படவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகி சில சட்டத்தரணிகள் இணைந்து 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்கினர்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அப்போது சபாநாயகர் நிலையியல் கட்டளைச்சட்டம் உட்பட கட்டளைச் சட்டங்களை இடைநிறுத்தி, நாங்கள் எவரும் பார்க்காத 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.
நாங்கள் எவரும் அதனை பார்த்திருக்கவில்லை. அந்த முறைமை சரியானதா என நான் விஜேதாச ராஜபக்சவிடம் கேட்கின்றேன். நீங்களும் அப்போது இருந்தீர்கள். நீங்கள் எதிர்க்கவில்லையே.
தாம் இருக்கும் அரசியல் கட்சியை சார்ந்து அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்க முடியாது. எந்த அணியில் இருந்தால், அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க கொள்கைகள் இருக்க வேண்டும்.
விஜயதாச ராஜபக்ச அன்று 19 வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார். 20வது திருத்தச் சட்டத்திற்கும் வாக்களித்தார். தற்போது 20வது திருத்தச் சட்டம் தவறு என்று கூறுகிறார். என்ன இந்த கேலிக்கூத்து. எனக்கு இப்படியான நாடாளுமன்றத்தில் இருப்பது அருவருப்பாக உள்ளது. மாறி மாறி பேசுகின்றனர்.
20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையில் 20 திருத்தங்களை கொண்டு வந்தேன். 20வது திருத்தச் சட்டத்தை 19வது திருத்தச் சட்டத்திற்கு அருகில் கொண்டு வருவதற்கான 20 திருத்தங்களை முன்வைத்தேன். அவற்றை நிராகரித்தனர்.
20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த அமைச்சர் இங்கு இல்லை, அவர் ஒழிந்துக்கொண்டுள்ளார். அன்று நீதியமைச்சராக இருந்தவர் தற்போது ஒழிந்துக்கொண்டுள்ளார். 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த முன்னாள் நீதியமைச்சருக்கு நாடாளுமன்ற அவையில் இருப்பதற்குகூட தைரியம் இல்லை.
20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், எமது நாட்டுக்கு கிடைக்கும் சர்வதேச ஆதரவு இல்லாமல் போகும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்சவும் அலி சப்றியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்றனர்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பலமிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ், இலங்கையின் பொருளாதார, அரசியல் நெருக்கடி வெளிப்பட்டது.
அந்த திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு, நீதி சேவை ஆணைக்குழு போன்ற பிரதான ஆணைக்குழுக்களின் சுயாதீனம் இல்லாமல் செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.
20 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மூன்று ஆண்டுகள் நாடு அழிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தின் அதிகாரம், சபாநாயகரின் அதிகாரம், பிரதமரின் அதிகாரம் ஆகியவற்றை எடுத்து ஜனாதிபதிக்கு வழங்கினர்.
20வது திருத்தச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட சுப்பர் மேன் நாட்டை அழித்தார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் எமது அதிகாரங்களை தக்கவைத்திருக்க வேண்டும். சுப்பர் மேன் ஒருவரை உருவாக்கினர். இறுதியில் அந்த சுப்பர் மேன் நாட்டு மக்களையும் நாட்டின் விவசாயிகளையும் அழித்தார்.
நாட்டின் அனைத்து துறைகளையும் அழித்தார். இறுதியி நாட்டை விட்டு சென்றார். நாட்டை ஓடியவர் நாடு திரும்பி அரச வீடு ஒன்றில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு ஓய்வை கழித்து வருகிறார்.
முழு நாட்டை அழித்து விட்டு, நாட்டில் இருந்து தப்பியோடி விட்டு, தற்போது திரும்பி வந்து, வெட்கமின்றி, அரசுக்கு சொந்தமான வீட்டில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வசித்து வருகிறார். நாட்டுக்கு செய்த பாவத்தை போக்க விகாரைக்கு சென்று தங்குங்கள்.
அல்லது ஆஸ்ரமத்திற்கு செல்லுங்கள். இந்திய அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற வீடுகளில் இருப்பதில்லை ஆஸ்ரமத்திற்கு சென்று விடுவார்கள். எமது நாடு அழிந்து விட்டது. ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை.
அரசாங்கத்தை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி 22வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. நாட்டை காப்பாற்றவே ஆதவளிக்கின்றது. அனைத்து இடங்களிலும் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
சிலர் ஒரு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றனர். எந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்தாலும் சர்வதேச உதவிகள் அவசியம். ஜனநாயகம் அல்லது மனித உரிமைகள் மீதுள்ள அன்பால், 22வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படவில்லை சர்வதேச ஒத்துழைப்புகளையும் நிதியுதவிகளையும் பெறவே இந்த திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்காது.உணவு, மருந்து போன்றவற்றை கொள்வனவு செய்ய உதவிகள் கிடைத்தாலும் நாட்டை கட்டியெழுப்ப நிதியுதவிகள் கிடைக்காது.
ஒரு வருடத்திற்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்ட போதிலும் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை மாத்திரமே வழங்க உள்ளது எனவும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 21 மணி நேரம் முன்

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri
