செம்மணி மனிதப் புதைகுழி குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்! சுனில் வட்டவல உறுதி
செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்தார்.
குறிப்பாக செம்மணி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு அந்த நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
உரிய நடவடிக்கை
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"மேற்படி விவகாரங்கள் தொடர்பில் எம்மிடம் உள்ள தகவல்களை நாம் வெளியிட மாட்டோம். அவற்றை வெளியிட்டால் அதைப் பெற்றுக்கொள்வோர் அதனை எவ்வாறான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவார்கள் எனத் தெரியாது.
இந்த விடயங்களில் எவரது அவசரத்துக்கும் ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.
கடந்த அரசு அவ்வாறு செயற்பட்டாலும் எமது அரசு ஒருபோதும் அவ்வாறு செயற்படாது. அரசு என்ற வகையில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவோம்."என தெரிவித்தார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
