நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை
தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல்
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.
இதன்பிரகாரம் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சற்குணதேவி ஜெகதீஸ்வரன், செல்வராசா உதயசிவம் ஆகிய மூவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri