தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிராக கடும் பிரசாரத்தில் ஈடுபட்ட சுமந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் களம் இறங்கியுள்ள நிலையில், அரியநேத்திரன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு வெளியாகியிருந்தது.
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளதை அடுத்து தமிழர் அரசியல் பரப்பில் பல விமர்சனங்கள் தோன்றியுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோகபூர்வமாக மேடை ஏறியிருந்தனர். கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தனர்.
இதன்போது தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரனுக்கு எதிராக இவ்வாறு கடும் பிரசாரத்தில் எம்.ஏ சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam