விரைவில் முடிவு! சுமந்திரன் வெளியிட்ட முக்கிய தகவல்
வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் முடிவு கிட்டும் வகையிலான நிகழ்ச்சி நிரலொன்றை அறிவிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக குறிப்பாக இழுவைமடி தொழில் செய்வதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரத்திற்கும், கடல் உபகரணங்களுக்கும், கடல் வளத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சம்பந்தமாக விபரமாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயத்தை விரைவிலேயே ஒரு முடிவிற்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி நிரலொன்றை கூடிய விரைவில் அறிவிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan