சிறீதரனின் நகர்விற்கு ஆப்பு வைத்த சீ.வி.கே - சுமந்திரன்
தமிழரசுக் கட்சியினுடைய பதில் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M. A. Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதில் செயலாளராக இருக்கும் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலையில், அவர் ஏன் பதில் செயலாளர் பதவியை மட்டும் துறந்தார் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“சி.வி.கே.சிவஞானத்தை(C. V. K. Sivagnanam) பொறுத்தவரையில், சுமந்திரனை தக்கவைக்கவும் தொடர்ந்து அவரை தலைவராக காட்டவும் முற்படுவார்.
சுமந்திரன் இல்லாவிட்டால் சர்வதேச அரசியல் பிரதிநிகளிடம் பேச முடியாது என கூறுவார்.
இது சிறீதரனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வியூகமாக பார்க்கின்றேன் ” என தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam