சீனி, பருப்பு, கோழியின் விலைக் கட்டுப்பாடு நீக்கம் : திண்டாட்டத்தில் மக்கள்
சீனி, பருப்பு, கோழி, ரின் மீன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால் மா போன்ற உணவுப் பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியமை தொடா்பில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வா்த்தகா்கள் தமது கருத்துக்களைக் வெளியிட்டுள்ளனா்.
இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், விலையும் உயர்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர் ஒருவா் தமது கருத்தில், விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது, பெரும்பாலான இறக்குமதியாளர்கள், நேரடியற்ற சந்தையில் அதிக விலைக்கு வாங்கிய பொருட்களை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளாா்.
அத்தியாவசியப்பொருட்கள் விடயத்தில் ஒரு சில இறக்குமதியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அவர்கள் ஏகபோகத்தைக் கொண்டுள்ளாா்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
போஞ்சி மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டாலும், இன்னும் தட்டுப்பாடு நிலவுகிறது. 2021, நவம்பர் 3, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை 50ரூபாவால் அதிகரித்தது.
ஒரு வாரத்திற்கும் மேலாக சீனி இருப்புக்கள் தீர்ந்துவிட்டன. அறிவித்தும் கூட சீனி இன்னும் விநியோகிக்கப்படவில்லை. எனவே நுகர்வோர் கொள்வனவை குறைத்துள்ளனா். இதனால் விற்பனையும் குறைந்துள்ளதாக விற்பனையாளா் ஒருவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை எரிவாயுவை வாங்க முடியாத நிலையில் உணவுகளை, ஹோட்டல்களில் இருந்து பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என குடும்பப்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எாிவாயு இல்லை, சீனி இல்லை, பால் மா இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் வியாபாரிக்கு அதிகப் பணம் கொடுத்தால், அல்லது தட்டுப்பாடு உள்ள பொருட்களையும் சேர்த்து வேறு ஏதாவது பொருளை வாங்கினால், தட்டுப்பாட்டுப் பொருட்களையும் பெறமுடிகிறது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
