கிண்ணியா தளவைத்தியசாலையில் திடீரென மூடப்பட்ட சத்திர சிகிச்சைப்பிரிவு
கிண்ணியா தளவைத்தியசாலையில் இயங்கி வந்த சத்திர சிகிச்சைப் பிரிவானது திடீரென மூடப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வைத்திய நிபுணர்களின் பதிலீடின்றிய திடீரென ஏற்பட்ட இடமாற்றமே இக் குறித்த சத்திர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டமைக்கான காரணங்களாகத் தெரியவருகிறது .
இது தொடர்பில் கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரால் "வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாகச் சத்திர சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடவும்"என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி வைத்தியசாலையின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா மக்கள் மாத்திரம் சிகிச்சை பெற்றுவருவதில்லை, அருகாமையில் உள்ள தம்பலகாமம், சீனக்குடா உட்படப் பல பிரதேச மக்களும் கிண்ணியாவுக்கு வெளியே இருந்து சிகிச்சைபெற்றுவருகின்ற போதும், தற்போது அருகாமையில் உள்ள வைத்தியசாலை என்பது எதைக் குறிக்கின்றது என்பது மக்கள் மத்தியில் ஒரு கேள்விக் குறியாக்கியுள்ளது.
கிண்ணியா தளவைத்தியசாலையின் இது தவிரப் பல குறைபாடுகள் பல மாத காலமாக இருந்து வருகிறது. வெளி நோயாளர் பிரிவுக்கான நேரம் குறைக்கப்பட்டமை, பதிலீடின்றி வைத்தியர்கள் இடமாற்றம், அபிவிருத்தி திட்டங்கள் திருப்பப்படுதல், அம்புலான்ஸ்வண்டி மீளக் கையளிக்கப்பட்டமை எனப் பல குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன.
கிண்ணியா மண்ணில் தற்போது இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை எனக் கருதி உடன் வைத்திய நிபுணர்கள் உட்பட சக குறைபாடுகளுக்கும் விரைவான தீர்வினை பெற்றுத் தருமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
