சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மன அழுத்த பாதிப்பில் இருக்கின்றார் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
கோவிட் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தற்போது மன அழுத்த பாதிப்பில் இருப்பதன் காரணமாகவே கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி உதவியை கோரியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை இல்லை என்பதை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மிகவும் உணர்வுபூர்வமான கதையை பேசுகிறார். இந்த பிரச்சினையுடன் அவர் அதிகமான மனஅழுத்தத்தில் இருக்கின்றார் என்பது தெரிகிறது.
சாதாரணமாக இப்படியான பிரச்சினைகள் ஏற்படும் போது மக்களின் ஒத்துழைப்பை பெறவும் மக்களுக்கு விழிப்பூட்டவும் தெளிவுப்படுத்தவும் இப்படியான கதைகளை கூறுவார்கள். இந்தியாவை சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால், எமது மக்கள் எங்கு இருந்திருப்பார்கள்?. எமது மக்கள் விருந்துகளை வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இதனால், ராஜாங்க அமைச்சர் உணர்வுபூர்வமாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அமைச்சர்கள் ஒலிவாங்கியை பிடித்தால் இப்படியான கதைகளை கூறுவார்கள். அரசாங்கத்திடம் நிதி பிரச்சினையில்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
