நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டம்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் போராட்டங்கள்
நீட் தேர்வில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேட்டை கண்டித்தும், அதனை தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(24) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்பு அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வு
மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், லயோலா கல்லூரி மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரே மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதாக கூறப்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தன.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam