யாழில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்
யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(07.05.2023) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்சார தாக்கம்
வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார்.
இதன்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
