கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி ரயில் கடவையை கடந்த மாணவன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri
