பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) காலை இடம்பெற்றுள்ளது.
மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
03 பாடசாலை மாணவர்கள் மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
மேலதிக விசாரணை
பின்னர், மாணவர்களும் பிரதேசவாசிகளும் நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
