கோவிட் தொற்றில் குணமடைந்த மாணவர் ஒரு மாதத்தின் பின்னர் மரணம்
புத்தளம், முந்தல பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் விஞ்ஞான வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் ஆனந்த மூர்த்தி சஷிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் புத்தளம் நகரத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மாவணனின் தாய் மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.அதனை தொடர்ந்து மாணவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு மாதத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாணவன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், மாணவனை அதிகாலையில் படிப்பதற்காக எழுப்பும் போது, அவர் எழும்பாமல் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போதே மாணவன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவனின் உடலில் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan