வெளிநாட்டில் பெற்றோர் - இலங்கையில் பர்தாவுடன் மாணவனின் செயலால் அதிர்ச்சியில் பொலிஸார்
பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர் பண்டாரவளை, அத்தலப்பிட்டியவை சேர்ந்த 15 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அவர் பண்டாரவளையில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் பெற்றோர்
அவர் பாடசாலையில் நாடகம் மற்றும் நடிப்பு பயிலும் மாணவன் எனவும் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பரதநாட்டியத்திலும் ஆடியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் பரத நாடகங்களில் இளம் பெண்ணாக தோன்றியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் தனது சகோதரியுடன் தனது பாட்டியின் வீட்டில் தங்கியுள்ளார்.
மாணவனின் பாட்டி உளவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
பர்தா அணிய ஆசை
தனது தாயார் அனுப்பிய பணத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பர்தாவை வாங்கியதாகவும் மாணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தனக்கு பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தனது சகோதரி மேலதிக வகுப்புகளுக்கு சென்ற போது, அவரது உடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை மறைவான இடமொன்றில் அணிந்து கொண்டதுடன், நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாகவும் அந்த மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam