கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டரில் கடுமையாக குறைபாடுகள் காணப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலங்கள் முழுவதும் இயங்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டரில் இணைய வசதிகள், விசாக்கள் மற்றும் இரட்டை குடியுரிமை சான்றிதழ்களை அச்சிடுவதற்கான வசதிகள் கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் வருகை முனையத்தில் உரிய வசதிகள் இல்லாததால் வெளியில் அமைந்துள்ள தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்காலிக ஓட்டுநர் உரிமம்
உரிய கவுண்டரில் உள்ள ஊழியர்களுக்கு குடிநீர், முதலுதவி வசதிகள் அல்லது ஓய்வெடுக்க பொருத்தமான இடம் கூட இல்லை. அவர்களின் பணி நேரத்தில் பராமரிப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரித்த போது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினரின் வசதிக்காக நிறுவப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டர் திறம்பட பராமரிப்பது மிகவும் முக்கியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri