தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!
மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம்(12) நடைபெற்று வருகிறது.
குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏராளமான பொலிஸார் குவிப்பு
அந்தவகையில் இன்றையதினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வழமை போல் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவித்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
