இலங்கையில் அமுலாகும் கடுமையான கட்டுப்பாடுகள்? - வெளியாகியுள்ள முக்கிய தகவல்
கோவிட் தொற்று வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த விரைவில் அரசாங்கத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முடக்கப்பட்டால் அது நாளாந்தம் பணி செய்பவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் கோவிட் நோயை தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கும் இடையே இன்று காலை இடம்பறெவுள்ள முக்கியமான சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பு பிற்பகலில் நடக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன,
எனினும் கோவிட் காரணமாக சில பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள முடியாத நிச்சயமற்ற தன்மையுள்ளது.
அரசாங்க வட்டாரங்களின்படி, கோவிட் நோயை தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவை சந்திக்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளாந்தம் பணி செய்பவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்பதால், முழுமையான பூட்டுதலை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்தில் இதுவரை ஒருமித்த கருத்து இல்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு குறுகிய கால முடக்கம் கூட மீட்க முயற்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கவலை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
