நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்
நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் இருந்து போக்குவரத்து தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வருடாந்த மகோற்சவம்
இந்த போக்குவரத்து தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக நேற்று துறைசார் அதிகாரிகளால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
வீதித்தடை விபரங்கள்
இதற்கமைய வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும்.
அத்துடன் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கள விஜயத்தில், யாழ்.மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
