யாழில் வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல்: பொதுமக்கள் அச்சம்
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான பதாதையொன்றை வைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பைத் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
குறித்த நபரின் வீட்டு பகுதியின் வீதியோரமாகப் பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளதால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.

வீதிகளில் குப்பை போட வேண்டாம்
இதனால் பொறுமை இழந்த குறித்த நபர் பொம்மை ஒன்றையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி, " சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்" எனப் பதாகை எழுதிக் காட்சிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam