பற்றி எரியும் வளைகுடா நாடுகள்.. பாப்பரசர் முன்வைத்துள்ள கோரிக்கை
வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் லியோ, வன்முறையின் சுழற்சியை நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள யாத்ரீகர்களுக்கு வாராந்திர உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களை "ஆழ்ந்த கவலையுடன்" தான் கண்காணித்து வருவதாகவும், "வன்முறையின் சுழல்" என்று அவர் அழைத்ததை நிறுத்துமாறு ஒரு உணர்ச்சிமிக்க வேண்டுகோளை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
தடுக்கும் தார்மீகப் பொறுப்பு
"வன்முறையின் சுழல் சரிசெய்ய முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு அதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று அவர் கூறினார்.

"ஸ்திரத்தன்மையும் அமைதியும் பரஸ்பர அச்சுறுத்தல்கள் மூலமாகவோ அல்லது ஆயுதங்கள் மூலமாகவோ கட்டமைக்கப்படுவதில்லை. மாறாக நியாயமான, உண்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே கட்டமைக்கப்படுகின்றன." எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri