பிடியாணையை நிறுத்துங்கள்! ராஜித விடுத்துள்ள கோரிக்கை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக தன்னை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவு
தொடர்புடைய உண்மைகளை உறுதிப்படுத்த திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று நீதவான் கூறியுள்ளார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கோரிக்கையின் பேரில் நீதிமன்றம் எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
