இந்திய ரோலர் அத்துமீறல் தொடர்ந்தால் மீண்டும் போராட்டம்: கடற்றொழிலாளர் சங்கங்கள் எச்சரிக்கை
யாழ்ப்பாண கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மனு ஒன்றை கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மனு கையளிப்பு மற்றும் கண்டனப் போராட்டமானது இன்று (12.3.2024) இடம்பெற்றுள்ளது.
மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கைகள்
இதை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா
அரச உயர் மட்டம் வரை மனுக்ககளை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும்
மேற்கொண்டோம்.
ஆனால், எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை. ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மனுவை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம்.
எமது கோரிக்கைக்கான பதிலை இந்த மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வழங்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக திட்டமிட்டுள்ளோம்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர், யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர், யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் மற்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் உப தலைவர் உட்பட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
