தீவிரமடையும் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள்- செய்திகளின் தொகுப்பு
சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மூன்று கட்சிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
நேற்று மாலை முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்து உரையாடியுள்ளது. அதன்போது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
அத்துடன் தற்போதைக்கு சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரே கட்சியாகவும் குமார வெல்கமவின் கட்சி செயற்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதித் தெரிவின் போது குமார் வெல்கம நேரடியாக ரணிலை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது கட்சியினரும் நாடாளுமன்ற மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri