கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூட நடவடிக்கை
கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக பூட்டுமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.
8 வழக்குகள் தாக்கல்
குறித்த சிற்றுண்டிச்சாலைகளை செங்கலடி சுகாதார அதிகாரிகள் பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களினால் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திறந்த நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட போது 3 சிற்றுண்டிசாலைகளையும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த உத்தரவிடுமாறும் குறிப்பிட்டுள்ளது.
2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக பூட்டி சுகாதார பரிசோதகர்கள் சிபாரிசு செய்த திருத்த வேலைகளை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்துள்ளார்.