நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பதிவு(Video)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் இன்றைய தினம்(15.06.2023)வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 03/06/2023 அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொது விளையாட்டரங்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 07.06.2023 அன்று கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிற்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
