நடன போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரி (Photos)
அகில இலங்கை நடன போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித சிசிலியா பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான சமஸ்தலங்கா என்னும் இந்த நடனப்போட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் சார்பில் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மேல் பிரிவை சேர்ந்த தைந்நீராடல் மற்றும் தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
குழுநடனத்தில் போட்டியிட்ட தைந்நீராடல் நடன குழு மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று கல்லூரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், தேயிலைக் கொழுந்து நடனக் குழு மாணவிகள் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி வழிகாட்டலில், நடன ஆசிரியை பி.விஜயசேகரன், ஆசிரியை ரீ.நிஷாந்தன், மாணவி பீ.பிரதாயினி ஆகியோரின் கடின முயற்சியினாலும் பெறப்பட்டதென பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
