கிளிநொச்சி புன்னைநீராவி மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட, புன்னைநீராவி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்( S. Shritharan)நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (26.08.2024) நடைபெற்றுள்ளது.
நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரி - கிளப் வசந்த படுகொலையில் திடுக்கிடும் தகவல்கள்
உடனடித் தேவைப்பாடுகள்
இதன்போது, புன்னைநீராவி பிரதேச மக்களின் உடனடித் தேவைப்பாடுகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், அதுசார்ந்த மக்களின் எதிர்பார்ப்புகள் என்பவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டறிந்துகொண்டார்.
இச்சந்திப்பில், புன்னைநீராவி கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், கமக்கார அமைப்பினர், ஆலய நிருவாகிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |