மாற்றம் எங்களுக்குள் இருந்து வர வேண்டும்! சிறிநாத் எம்பி
பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில் இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து எங்களுக்குள் இருந்து மாற்றம் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான “குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” என்ற விசேட கலந்துரையாடல் நேற்று (29.08.2026) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார பிரச்சினை
மேலும் தெரிவிக்கையில், மிக முக்கியமாக இந்த அரசியல் உரிமையும், பொருளாதார உரிமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த அரசியல் உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுது, அதாவது அதிகாரப் பரவலாக்கம் - நீங்கள் மாகாண சபை என்று கேட்ட விடயம் - பொதுவாக அதிகாரப் பரவலாக்கம், ஏனென்றால் எங்களுடைய அதிகாரத்தை எல்லா மட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற பொழுது, இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மிக இலகுவாக முன்னெடுத்துத் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

ஒரு நாட்டில் வந்து பல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலே இந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அங்கு அரசியல் பிரச்சினைகள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்ற பொழுதுதான் அங்கு பொருளாதார ஸ்திரத்தன்மை இருக்கும்.
முக்கியமாக எங்களது நாட்டில் வந்து மிக முக்கியமாகத் தேவையாக இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட வேண்டிய, கடந்த காலங்களிலே பொருளாதார நெருக்கடியிலே சிக்கித் தவித்த நாடு இப்போது தற்காலிகமாக ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றாலும் கூட, அது நிரந்தரமாக உங்களுடைய இந்த நீங்கள் முன்னிலைப்படுத்திய அல்லது முகவரியிட்ட விடயங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றால், மிக முக்கியமாக அந்தச் சமத்துவமும் எல்லாரும் இங்கு பல்லினம் வாழுகின்ற சமூகச் சமத்துவம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரிதான், சிறுபான்மையாக இருந்தாலும் சரிதான் எல்லோருக்கும் உரிய சமத்துவம் இருக்க வேண்டும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை
இளைஞர், யுவதிகளுக்கான சமத்துவம், மதங்களுக்கான சமத்துவம், இன்னும் எல்லா வகையிலும் அந்தச் சமத்துவம் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த அரசியல் உரிமைகள் வந்து உண்மையாக அதிகாரப் பரவலாக்கங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்ற பொழுது, பொருளாதார ஒரு ஸ்திரத்தன்மை அங்கு அடையப்படும்.
பல விடயங்கள் வேலைவாய்ப்பு அல்லது போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றது விளையாட்டு இந்த விடயங்களெல்லாம் நீங்கள் சொன்னதில் எனக்கு நிறைய உடன்பாடு இருக்கின்றது. மாகாண சபைகள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த விடயங்களை ஒவ்வொன்றும் ஒரு கள நிலைகளிலும் பிரதேச சபை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாகாணங்களின் ஊடாக இந்த அடிப்படை விடயங்கள் உண்மையாக உங்களுடைய குரலாக வருகின்ற பொழுது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

இந்த எண்ணக்கருக்கள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த நாட்டில அந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக குரலாக இந்த எண்ணப்பாடுகளை நாங்களும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது, வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, உண்மையாக ஒரு வலுவான நிலையில் இருக்கின்ற அரசு நான் அரசாங்கக் கட்சியைப் பற்றிச் சொல்லவில்லை, அரசாங்கம் இந்த இளைஞர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் தான் அந்த வாக்குகளைச் செலுத்துகின்ற தீர்மானிக்கின்ற சக்திகளாக வருகின்றீர்கள். உங்களுடைய எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கின்றதோ அதைச் சார்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14