இலங்கையின் மதச் சுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா கரிசனை
இலங்கையில் மதச்சுதந்திர சூழல் குறைவடைந்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திர ஆணைக்குழு (USCIRF) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கை "சிறப்பு கண்காணிப்பு பட்டியலில்" (Special Watch List) இணைக்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திர ஆணைக்குழு> ஆண்டு அறிக்கையில், இலங்கையின் மதச்சுதந்திர சூழல் ஒரு குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்கு, இலங்கையில் மதச்சுதந்திரக் குறைவு தொடர்பாக கண்காணிப்பு மேற்கொள்ள பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை பௌத்த சமயத்துறைகள் திணைக்களம் மற்றும் கலாச்சார அமைச்சுடன் மத நிறுவனங்களின் நிலபிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கும், பயங்கரவாதத்தை வரையறுக்கும் சட்டச் சூழலை தெளிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திர ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தேசியவாத அமைப்புகள் முஸ்லிம் மதவழிபாட்டாளர்களை இலக்கு வைத்து நடத்திய செயற்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
