ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சார்பில் போர் செய்யும் இலங்கையர்கள்

Russo-Ukrainian War Sri Lanka Russia
By Sivaa Mayuri Mar 27, 2024 08:38 PM GMT
Report

உக்ரைனில் நடந்து வரும் மோதல்களில் இலங்கையர்களும் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்ட குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சார்பில் போர் செய்யும் இலங்கையர்கள் | Srilankans In Russia Ukraine War

இந்தநிலையில் ரஷ்யப் படைகளுடன் போரிடும் மற்ற இலங்கையர்களால் இந்த உடல்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன.

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பலர் பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் என்பதுடன் ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் புதைக்கப்பட்ட இலங்கையர்

இலங்கையில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சார்பில் போர் செய்யும் இலங்கையர்கள் | Srilankans In Russia Ukraine War

கடந்த டிசம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஸ் ஹேவகே மற்றும் எம்.எம்.பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹெவகே புதைக்கப்பட்டார்.

ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இந்தநிலையில் உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க என்பவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 137 பெண்கள்: ஆபத்தான நிலையில் இருவர்

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 137 பெண்கள்: ஆபத்தான நிலையில் இருவர்

பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு

பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US