அவுஸ்திரேலியாவில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய இலங்கை தம்பதி
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் மிகவும் பரபரப்பான வீதிகளில் ஒன்றான ரீஜென்சி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருந்து சிறுவனை இலங்கை தம்பதியொன்று காப்பாற்றியுள்ளனர் .
சரியான சிக்னல்களை புரிந்து கொள்ளாமல் இந்த சிறுவன் வீதியை கடக்க முயன்றுள்ளார்.
கடவைக்கு அருகில் காரில் சென்ற இலங்கை தம்பதி வேகமாக பிரேக் போட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
இலங்கை தம்பதி
குறித்த சிறுவனின் பெற்றோரும் இலங்கை தம்பதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கவனமாகவும் புரிந்துணர்வாகவும் வாகனம் செலுத்தியதன் காரணமாக விபத்தை தவிர்க்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தம்பதி, என்ன நடந்தது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை எனவும், சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவனும் மிகவும் பயந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளம்
இது தொடர்பான சம்பவம் வாகனத்தின் முன்பக்க கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குஷானி ஜயக்கொடி மற்றும் துலாஜ் சில்வா ஆகிய தம்பதிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தம்பதி உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொண்டு சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.