இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video)

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Selvarajah Kajendren
By Kumar Nov 20, 2022 08:00 AM GMT
Report

“உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவமாக நாம் இலங்கை இராணுவத்தையே பார்க்கின்றோம். உலகில் எங்கும் எந்த இராணுவமும் உயிர் நீத்தவர்களின் உடலங்களைக் கிளறி எறியவில்லை. ஆனால் இலங்கை இராணுவம் அதனை முன்னெடுத்தது”என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவீர துயிலும் இல்லம் சிரமதானம்

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும் பணிகள் தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவீரர் பணிக்குழுவினர், பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மேலும், மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.


சிரமதான பணியை இடைநிறுத்த கோரும் பொலிஸார்

இதன்போது, திருக்கோவில் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த சிரமதான பணியை இடைநிறுத்துமாறு கோரினர். இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப்பிரச்சினை எழும் எனவும் அதனால் இப்பணியை நிறுத்துமாறும் பொலிஸார் கோரினர்.

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

எனினும் "இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை" என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து பொலிஸார் அங்கிருந்துசென்றர். அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,

“இந்த மாதம் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவுகூரும் புனிதமான மாதம். 2009ஆம் ஆண்டு வரையில் இந்த நினைவேந்தல்கள் பாரியளவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

2009 மே 18இல் எமது உரிமைப்போராட்டம் இன அழிப்பின் ஊடாக முடிவுறுத்தப்பட்ட நிலையில் வடகிழக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலுமிருந்த வித்துடல்கள் இராணுவத்தினால் கிளறி எறியப்பட்டன.

அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்,பல துயிலுமில்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கமுடியாத வகையில் இலங்கை அரசும் அதன் இராணுவமும் புலனாய்வுத்துறையினரும் நெருக்கடிகளை வழங்கிவருகின்றனர்.

அதனையும் தாண்டி எமது புனிதர்களின் நினைவுகூருவதை எமது மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

அந்த வகையில் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூரும் வகையில் துயிலும் இல்லங்கள் பல்வேறு தரப்பினராலும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றது.

21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்.

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

சகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் உயிர்தியாகம் செய்துள்ளார்கள். அந்த இலட்சியத்தினை நாங்கள் முன்கொண்டுசெல்வோம் என்பதை உறுதிகொள்ளும் நாளாக இந்த நாள் அமையவேண்டும்.

21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படும்போது அந்த வாரத்தினை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதியில் வீதியோரங்களை தூய்மைப்படுத்தி புனிதர்களின் நினைவு தினத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கை இராணுவம்

வடக்கு கிழக்கில் உள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர்.

அந்த இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இது இராணுவ ஒழுக்கமற்ற நடவடிக்கையினையே காட்டுகின்றது. இறந்தவர்களின் உடலங்களை கிளறி எரிந்ததாக உலகில் எந்த இராணுவமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை.

பிரித்தானியா இந்த நாட்டினை 150 வருடத்திற்கு மேல் அடிமைப்படுத்தி வைத்திருந்திருந்தாலும் கூட தோற்கடித்த எமது மன்னர்களின் சிலைகளைக்கூடி நிறுவிவைத்துள்ளார்கள்.

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

யுத்த மரபுகளை மீறியே யுத்ததினை செய்தது. யுத்தம் முடிந்த பின்னர் கூட உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத வகையிலான அநாகரிமான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றும் துயிலும் இல்லங்களுக்கு மேல் அவர்கள் இருப்பதன் மூலம் உலகிலேயே ஒழுக்கம் அற்ற, நெறிகெட்ட இராணுவம் என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்த நிலைமை மாறவேண்டும். சர்வதேச சமூகம் இவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றவேண்டும்.

இலங்கை இராணுவமே உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் - செ.கஜேந்திரன் (Video) | Srilankan Army Undisciplined Army In The World

தமிழினம் இந்த தீவிலே வாழும் வரைக்கும் நினைவேந்தல்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். வெறுமனே விளக்கேற்றுவதும் மாலைபோடுவதும் கடமையல்ல.

அவர்களின் இலட்சியத்தினை அடைவதற்கு ஒவ்வொருவரும் நேர்மையாக செயற்படவேண்டும். ஒருபுறம் அரசாங்கத்தின் தோளில் கைகளைப்போட்டுக்கொண்டு, அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக தமிழ் தேசியத்தினை நாங்கள் விற்ககூடாது.

நாங்கள் அனைவரும் அந்த இலட்சியத்தினை அடைவதற்காக ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும்” என்று கூறியிருந்தார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US