தொழில்நுட்ப கோளாறினால் தாமதமாகியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்
தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு 217 பயணிகளுடன் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறித்த விமானம் தாமதமாக புறப்படுவதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் மார்ச் 20 ஆம் திகதி காலை 117 பயணிகளுடன் கொரியாவின் இன்சியான் நகருக்கு பறந்தது.
இதன்படி, கொரியாவிற்கு பணிக்காக செல்லவிருந்த எஞ்சிய 100 பயணிகள் மார்ச் 24 ஆம் திகதி தென்கொரியாவின் இன்சியான் நகருக்குச் செல்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் தாமதம் காரணமாக தென் கொரியாவில் அவர்களது வேலைகள் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |