மோசமான வானிலை: வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
அதிக மழை வீழ்ச்சி காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், களு கங்கைப் பகுதியே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி, களு கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்மட்டம் அதிகரிப்பு
களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் அல்லகாவ பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், வெள்ளப்பெருக்கை எட்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025