இலங்கை மக்களுக்கு மற்றுமொரு சிக்கல்!
நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது.
சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.
விலைகள்
இதன் காரணமாக பெருமளவிலான மக்கள் அதிகளவு வாங்கி வந்த மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவிற்கும், ஒரு கிலோ பலாப்பழம் 200 ரூபாவிற்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது விளைச்சல் தேவைக்கு ஏற்ற வகையில் இல்லாமையினால் மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.