நோயாளியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி
திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எச்.பீ.சந்ராவத்தி (52 வயது) என்ற பெண்ணே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பெண் தனது கணவருடன் ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வருகின்றார்.
அப்பெண்ணின், மகளின் மகன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சிறுவனை பார்ப்பதற்காக பேருந்திற்கு காத்திருந்த நேரத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபரொருவர் இப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கின்றார்.
அவ்வேளையில், குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
