சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரல்
சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
புதிய சுங்க வரி
கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சுங்க வரி காரணமாக கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது, அதேநேரம் உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் 15 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை இறக்குமதி பற்றி குறிப்பிட்ட அவர், 2023 பெப்ரவரி 13ஆம் திகதி முதல்
இன்றுவரை 4.5 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளார்.