மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவிடம் வழங்க முடிவு - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்
திருகோணலையில் தற்போது LIOC என்ற இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எரிபொருள் குதங்கள், அதே நிறுவனத்துக்கு மேலும் 50வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 21 எரிபொருள் குதங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எஞ்சியுள்ள 61 எரிபொருள் குதங்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “ட்ரின்கோ பெற்றோலியம் டேனிமினல் லிமிடெட்” என்ற நிறுவனத்தின் கீழ் பராமரிக்கப்படும்.
இந்த நிறுவனத்தில் 51 வீதப் பங்குகளை இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனமும், 49 வீதப் பங்கை இந்திய எரிபொருள் நிறுவனமும் கொண்டிருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
LIOC என்ற லங்கா இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள இந்தியன் ஒயில் கோப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.
இது இலங்கையில் சில்லறை பெட்ரோல் / டீசல் நிலையங்களை இயக்கி வருகிறது.



