இலங்கையில் தேங்காய் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கையின் சராசரி தேங்காய் விலை வாராந்த ஏலத்தில் அதிக விலையை பெற்றுள்ளது.
தேவையை விட அதிகமாக ஏலத்துக்கு தேங்காய்கள் விநியோகிக்கப்பட்டபோதும் விலை உயர்வாகவே இருந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேங்காய்களின் விலை
அக்டோபர் 13 அன்று 1,000 தேங்காய்களின் விலை 0.1 சதவீதம் அதிகரித்து 59,236.26 ரூபாவாக இருந்த நிலையில், ஏலத்தில் 1,125,036 தேங்காய்கள் விநியோகிக்கப்பட்டன.எனினும் 825,176 தேங்காய்களை மாத்திரமே விற்பனை செய்ய முடிந்தது.
இதேவேளை 2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்து 573 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.