நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்
நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் இவ்வாறு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கை
சில தினங்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த நாட்டையே உள்ளடக்கும் வகையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 23168 பேரும், 531 இராணுவப் படையினரும் இந்த தேடுதல் நடவடிக்கைகளில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்கிய நபர்கள்
இதன்போது போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் 622 பேரும், பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 1662 பேரும், சந்தேகத்தின் பேரில் 1516 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 732 பேரும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1557 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தமாக 5689 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
