புத்தளத்தில் மகிந்த தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் (Photos)
'சாம்பலில் இருந்து எழுவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் புத்தளத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் இடம்பெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம்
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8ஆம் திகதி 'களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தனவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நாவலப்பிட்டியில் நடந்த கூட்டம்
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதேவேளை நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தளத்தில் மூன்றாவது கூட்டம்
அதற்கமைய பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கூட்டம் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் ஏற்பாட்டில் மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துவத்தில் இன்று புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறும் நிலையில் இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.



