நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ள இலங்கை நாடாளுமன்றம்! அசாத் சாலி
இலங்கை நாடாளுமன்றம் தற்போது நகைச்சுவையானர்களால் நிரம்பியுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Azath Salley) தெரிவித்துள்ளார்.
இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அதிக பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெற்ற கட்சியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற சபாநாயகரின் கல்விதகைமை தற்பொழுது கேள்விக்குரியாகியுள்ளது.
அவர் பதவி விலகியதை தொடர்ந்து இன்று புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் பெயரின் முன்னாலும் கலாநிதி என்ற பட்டம் உள்ளது.
அத்துடன் 20 தொடக்கம் 30 பேரின் கல்விதகைமை பரிசோதிக்கப்பட்டு வருகின்றமையானது இலங்கை வரலாற்றிலே முதல்முறையாக நடைபெறுகின்றது” என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |