இழுவை படகுகளுடன் 26 பேர் கைது
2022 செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வடக்கு கடற்பரப்பில் வெற்றிலைக்கேணிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினர் ஒரு டிங்கி படகு மற்றும் உள்ளூர் மீன்பிடி இழுவை படகுகளுடன் 26 பேரைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள்,கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கடல் வழிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக நாட்டை சுற்றியுள்ள கடலோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது நேற்று 15ஆம் திகதியன்று 4 பெண்கள் 18வயதுக்குட்பட்ட 5 பேர் உட்பட்ட 21பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை 5 பேர் படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், பூநகரி, உடுத்துறை, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய இடங்களை
சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இவர்கள், யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸாரிடம்
கையளிக்கப்பட்டுள்ளனர்.