11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு (PHOTOS)

Colombo Jaffna Sri Lanka Cricket Sri Lanka
By Thileepan Jun 11, 2022 07:20 PM GMT
Report

இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 59.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சாம்சன் 80 பந்துகளில் 77 ஓட்டங்களையும், பிரியந்தன் 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு (PHOTOS) | Srilanka Local Cricket Match

பந்து வீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி சார்பில் சாகித்திரன் 5 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி 56 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

போட்டி சமநிலையில் முடிவு

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் டிலக்சன் 40 ஓட்டங்களையும், சாகித்திரன் 18 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் பரத்வாசன் 4 விக்கெட்டுகளையும், பிரியந்தன், கஜானன் தலா 3விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டார்.

84 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள யாழ்.இந்துக்கல்லூரி இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு (PHOTOS) | Srilanka Local Cricket Match

துடுப்பாட்டத்தில் இந்துக்கல்லூரி அணி சார்பில் கஜாநாத் 30ஓட்டங்களையும், பிரியந்தன் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி சார்பில் சதூர்சன் 2 விக்கெட்டினை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 31 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றது.

11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு (PHOTOS) | Srilanka Local Cricket Match

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் கவிசாகரன் 27, உசாந் 12 ஓட்டங்களை அதிகமாக பெற்றனர். பந்து வீச்சில் இந்துக்கல்லூரி சார்பில் அர்ஜன் 5 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இதன்படி 11ஆவது இந்துக்களின் பெரும்சமர் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

11 ஆவது இந்துக்களின் பெரும் சமர் போட்டி சமநிலையில் முடிவு (PHOTOS) | Srilanka Local Cricket Match

சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்.இந்துக்கல்லூரி அணி வீரர் சாம்சனும்,சிறந்த பந்து வீச்சாளராக கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரர் சாகித்திரனும்,சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரர் ராகுல் ராவிட்டும், போட்டியின் ஆட்டநாயனாக கொழும்பு இந்துகக் கல்லூரி அணி வீரர் சஜிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US