சுதந்திர தின கொண்டாட்டங்களை நிறுத்துங்கள்! அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
சுதந்திர தின கொண்டாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு வங்குரோத்தடைந்துள்ளது
எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குக் கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
இதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri